கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார்.
அவரைப் பிரிந்து மனம் உடைந்து வாடி வந்த அவருடைய மனைவி ஷர்மிளா மிகுந்த மனவேத னையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மறைந்த இவர்களுக்கு இரண்டுபெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருக்கின்றனர். எதிர்காலம் இன்றி தவித்ததை மூன்று குழந்தைகளும் அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினகுமான வசந்தம் க.கார்த்திகேயன், பிரம்மகுண்டம் பகுதியில் அமைந்துள்ள மறைந்த சிவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று காலமான ஷர்மிளாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சல செலுத்தி அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அத்துடனா, மறைந்த தம்பதியரின் மூன்று குழந்தைகள் பிளஸ் டூ வரை படிப்பதற்கான கல்விக்கட்டணச்செலவை தானே ஏற்றுக் கொள்வதாக உறுதியனித்து, மறைந்த ஷர்மிளாவின் ஈமச்சடங்கிற்கு ரூ 25,000 நிதி உதவி வழங்கினார்.
இதற்காக, ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் ககார்த்திகேயனுக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.



