வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் மவுலீஷியா தர்கா தெருவில் 20 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாரதி ஆரம்பப் பள்ளி ( நிதிஉதவி) இயங்கிவருகிறது இந்த பள்ளியில் சுமார் 70 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையில் இப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த பள்ளியை சுற்றி இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கு மாணவ மாணவிகள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



