Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“9 ஆண்டுகள் அமைதியாக இருந்தது போதும்” – புதிய கட்சி தொடங்கிய சசிகலா ஆவேசம்!

அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கட்சி கொடி அறிமுகம்

Balaji by Balaji
24/02/2026
in தமிழ்நாடு
0
“9 ஆண்டுகள் அமைதியாக இருந்தது போதும்” – புதிய கட்சி தொடங்கிய சசிகலா ஆவேசம்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2017-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, 2021-ல் விடுதலையானது முதல் அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை அவரை கட்சியில் சேர்க்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்து அதிமுகவில் இணைய சசிகலா தரப்பு முயன்றது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இத்தகைய சூழலில், தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திருப்பம் இன்று நிகழ்ந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மேடையில் உரையாற்றிய அவர், தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை உறுதிப்படுத்தி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், “நான் பேசாமல் மௌனமாக இருந்தால், அது ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகிவிடும். தமிழக மக்களுக்காகவும், நமது தொண்டர்களுக்காகவும் புதிய களத்தைக் காணப்போகிறோம். ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறோம். இது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் ஏழை எளிய மக்களுக்கான திராவிடக் கட்சியாக இருக்கும். துரோகிகளையும் எதிரிகளையும் வேரறுப்பதே இக்கட்சியின் நோக்கம்.” என்று தெரிவித்தார்.

சசிகலா கட்சி கொடி

புதிய கட்சிக்கான கொடியையும் சசிகலா இதே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போதும் எனக் கூறிய சசிகலா, இனி மக்கள் நலன் மற்றும் கட்சி மறுமலர்ச்சிக்காக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலாவின் இந்தப் புதிய கட்சி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் சசிகலாவின் வருகை வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: AIADMK SplitAmma Political LegacyJayalalithaa BirthdayKamuthi Political MeetingMGR Jayalalithaa LegacyRamanathapuram NewsSasikala Flag LaunchSasikala New PartyTamil Nadu Political UpdateTamil Nadu PoliticsTN Breaking NewsVK Sasikala
Previous Post

“சென்னை புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து” – கனிமொழி எம்.பி கண்டனம்

Next Post

“அரண்மனையில் கைதியாக இருந்தேன்” – வங்கதேச அதிபர் ஷஹாபுதின் ஓபன் டாக்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved