Monday, September 28, 2026
11 °c
Columbus
17 ° Tue
18 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நெல், கரும்பு விவசாயிகளுக்கு வரலாறு காணாத ஊக்கத்தொகை உயர்வு

முதல்வர் விஜய் அறிவிப்பு

admin by admin
10/08/2026
in தமிழ்நாடு
0
நெல், கரும்பு விவசாயிகளுக்கு வரலாறு காணாத ஊக்கத்தொகை உயர்வு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசிய அவர், விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிடுதல் முதல் அறுவடை மற்றும் விற்பனை வரை கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்டார். தற்போதைய மாநிலத்தின் நிதிநிலை சவாலானதாக இருந்தாலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள நெல் கொள்முதல் பருவத்தை முன்னிட்டு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289 கூடுதலாக வழங்கப்பட்டு மொத்தம் ரூ.2,750 வழங்கப்படும். பொதுரக நெல்லுக்கு ரூ.159 கூடுதலாக வழங்கப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மேலும், மாநில அரசின் நெல்லுக்கான ஊக்கத்தொகை ஒரே ஆண்டில் ரூ.156-க்கும் அதிகமாக உயர்த்தப்படுவது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள மெட்ரிக் டன் ஒன்றுக்கான ரூ.3,290.50 என்ற விலையுடன், தமிழக அரசின் சார்பில் ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் கரும்புக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ.4,000 கிடைக்கும்.

கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.134-க்கும் அதிகமாக உயர்த்தப்படுவதும் தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Tags: சட்டப்பேரவைநெல் மற்றும் கரும்புமுதல்வர் விஜய்
Previous Post

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தடை:

Next Post

அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved