Monday, September 28, 2026
12 °c
Columbus
17 ° Tue
18 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்

admin by admin
10/08/2026
in தமிழ்நாடு
0
அரசு, கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “மொழி என்பது தொடர்புக்கான கருவி மட்டுமல்ல. தமிழ் என்பது நமது உயிரும், உணர்வும், பண்பாடும் ஆகும். தாயைப் போற்றுவது போல தாய்மொழியையும் போற்றுவது நமது கடமை. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழியையோ, மதத்தையோ, இனத்தையோ தாழ்த்திப் பேசுவதில்லை. மாறாக, உலகம் முழுவதும் தமிழின் பெருமையை உயர்த்திப் பேசுகிறது” என்றார்.

மேலும், மனோன்மணியம் சுந்தரனார் 1891-ஆம் ஆண்டு இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழின் தொன்மை, தமிழர் பண்பாடு மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பேசும் உயரிய படைப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1970-ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ளதாகவும், 2021 டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் நினைவூட்டினார்.

மேலும், 2026 ஜனவரி 28-ஆம் தேதி மத்திய அரசு அரசு விழாக்களுக்கான நடைமுறைகள் தொடர்பாக வெளியிட்ட வழிகாட்டுதலில் மாநிலப் பாடல் குறித்து எந்தவித குறிப்பும் இடம்பெறாததால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவது அரசியலமைப்புக்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது அல்ல என்றும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்தியாவின் உயரிய கொள்கையை வலுப்படுத்தும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் சட்டப்பேரவையில் முன்வைத்து, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

Tags: சட்டப்பேரவைதமிழ்த்தாய் வாழ்த்துதீர்மானம்
Previous Post

நெல், கரும்பு விவசாயிகளுக்கு வரலாறு காணாத ஊக்கத்தொகை உயர்வு

Next Post

தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல்வரின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved