Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

''சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்'' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
03/04/2025
in தமிழ்நாடு
0
mkstalin

mkstalin

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

”சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

மக்களவையில் வக்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்ப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, 232 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்து ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.

திரும்பப் பெறணும்

எண்ணிக்கை கூடுதலாக கிடைத்து இருக்கலாம். ஆனால் இந்த சட்டத்திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்பப் பெற வேண்டியது நமது கருத்து. அதை தான் நாம் இங்கு தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி இருந்தோம்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2 மணியளவில் வக்ப் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்.

வழக்குத் தொடருவோம்

இதனை உணர்த்தும் வகையில், இன்று (நேற்று)கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளோம். சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழகம் போராடும், வெற்றி பெறும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருப்பு பேட்ஜ் அணிந்த திமுக., கூட்டணிக் கட்சிகள்

சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்தபடி தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். லோக்சபாவில் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.

அதிமுக, பாமக வலியுறுத்தல்

வக்ப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரை தொடர்பாக பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவாக இருக்கும் என கூறினார்.

இதேபோன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்

வக்ப் வாரிய சட்டத்திருத்தம் பாசிச சக்திகளின் வரம்பற்ற தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன் விமர்சித்தார். வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய தாக்குதலை பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து கூறினார்.

பிரிவினை இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்பதால், இது போன்ற மசோதாக்களை பாஜக கொண்டு வருவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டினார்.

இந்திய நாடு பாஜகவிற்கு மட்டுமே சொந்தமல்ல என்று குறிப்பிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இஸ்லாமியர்களின் ஜனநாயக உரிமையில் கை வைத்திருப்பதாக விமர்சித்தார்.

இந்நிலையில், அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

Tags: MKStalinTamil News TodayWaqf Act
Previous Post

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

Next Post

வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பபெற தவெக விஜய் வலியுறுத்தல்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved