நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், அண்ணாமலைஅள்ளி, ஐக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சுமார் 40 கிராமங்களில் ஏறத்தாழ 2000 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள விவசாயிகள் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகிறனர். மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இந்த விவசாயிகள் 100 ஆண்டுகளாக அங்குள்ள பகுதியில் பல தலைமுறைகலாளக விவசாயம் செய்து வருகிறன்றனர். இவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் ஏதுமில்லை.
அது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரேஷன் கடை, பள்ளிக்கூட வசதி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என குடிமக்களுக்கு செய்து தரவேண்டிய அத்துனை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
நூற்றாண்டு காலம் ஐந்து தலைமுறையாக விவசாயிகளின் அவர்களின் குடும்பங்களின் உழைப்பு இந்த நிலத்தில் செலுத்தப்பட்டு காடுமேடாக இருந்ததை பன்படுத்தி விளைநிலங்காளாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் 1988-ல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை வருவாய் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக கூறி விவசாயிகளை வனத்துறையினர் வெளியேற்ற முயற்சித்துவருகினறனர்.
மாமரங்களுக்கு வரி கட்ட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறனர். 2006-ம் வருடம் நிறைவேற்றப்பட்ட பாரம்பரியமாக வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டம் 2006, பிற சமுதாய மக்களுக்கும் வழங்கியுள்ள உரிமைகளின் படி அவர்களுக்கு நிலப்பட்டா வழங்க வழிவகை செய்யவேண்டும்.
அதோடு வன உரிமை சட்டம்-2006 தெளிவான உரிமைகளை விவசாயிகளுக்கு வழங்கி இருக்கிற நிலையில் தினந்தோறும் விவசாயிகளை அச்சுறுத்துகிற வகையில் வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்வது, அடித்து துன்புறுத்துகிற தன்மையில் செயல்படுவது, சாலையை மறிப்போம், மின் இணைப்பைத் துண்டிப்போம் என மிரட்டிவருகின்றனர்.
அதோடு வெள்ளையன் காலத்து சட்டத்தை வைத்துக்கொண்டு (1882) விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது, விவசாயிகளின் உழவு கருவிகளை பறிமுதல் செய்துகொண்டு போவது போன்ற அத்து மீறல்களை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
எனவே வசாயிகள் சாகுபடி செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமல் சாகுபடி நிலங்களை வருவாய்த்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாமரங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வனத்துறையினர் விவசாயிகளை நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006 -ஐ அமுல்படுத்த வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க வட்ட தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லி பாபு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் அருச்சுனன் மாவட்ட தலைவர் குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், நிர்வாகி கோவிந்தன், பூங்கொடி, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் தீர்த்தகிரி, சின்னசாமி, சக்திவேல், சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சிஐடியு மாநில செயலாளர் நாகராசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அதிகாரிகள் பேச்சுவார்ததைக்கு அழைத்ததன் அடிப்படையில் சங்கத்தின் தலைவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா விவசாயிகளை வனத்துறை மிரட்டுவது, மா, தென்னை உள்ளிட்ட விவசாய பயிருக்கு வனத்துறை வரி போடுவது போன்ற நடவடிக்கைகள் கைவிடப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.