Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியா – பாக்கிஸ்தான் “எங்க தோல்விக்கு காரணமே இந்த வீரர் தான்..”

பாகிஸ்தான் பயிற்சியாளர் புலம்பினார்

admin by admin
16/02/2026
in விளையாட்டு
0
இந்தியா – பாக்கிஸ்தான்  “எங்க தோல்விக்கு காரணமே இந்த வீரர் தான்..”

Ishan Kishan of India plays a shot during Match 27 of the ICC Men’s T20I World Cup 2026 between the India and the Pakistan at R Premadasa International Stadium, Colombo, Sri Lanka on February 15, 2026. Photo: Deepak Malik / CREIMAS for BCCI

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்வி குறித்துப் பேசிய பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன், தோல்விக்குத் தனது அணி வீரர்கள் சொதப்பியது மட்டும் காரணமல்ல என்றும், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டமே முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

AlsoRead

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

டி20 உலகக் கோப்பை: 33 பந்துகளில் சதம்! ஃபின் ஆலனின் அசுரவேக ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மைக் ஹெசன், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இஷான் கிஷன் ஆடிய விதம் தான் எங்களிடமிருந்து வெற்றியையைப் பறித்துச் சென்றது. ஆடுகளம் ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது. ஆனால் இஷான் கிஷன் எந்தப் பயமும் இன்றி விளையாடினார்.” என்றார்.

மேலும் பேசிய மைக் ஹெசன், இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது, இந்தியா எடுத்த ஸ்கோர் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார். “இஷான் கிஷனின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை விட இந்தியா 25 ரன்கள் வரை கூடுதலாக எடுத்துவிட்டது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் தங்கள் இயல்பான பந்துவீச்சை மறந்து தவறு செய்துவிட்டனர்,” என்று வேதனை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பேட்டிங் குறித்துப் பேசிய ஹெசன், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ளத் தவறியதை ஒப்புக்கொண்டார். “நாங்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் சிறப்பாகச் செயல்பட்டனர்” என்றார்.

இதற்கிடையில், இஷான் கிஷனின் ஆட்டம் குறித்துப் பேசிய இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், “பந்து நன்றாகத் திரும்பியபோது இஷான் ஆடிய விதம் மிகச்சிறப்பு. சர்வதேசப் போட்டிகளில் அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று” என்று புகழ்ந்துள்ளார்.

Tags: 2026 டி20 உலகக்கோப்பைஇந்தியா – பாக்கிஸ்தான்இஷான் கிஷன்
Previous Post

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

Next Post

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

Related Posts

Sanju Samson

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

05/03/2026
Finn Allen

டி20 உலகக் கோப்பை: 33 பந்துகளில் சதம்! ஃபின் ஆலனின் அசுரவேக ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

05/03/2026

லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

04/03/2026

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்; மட்டையால் பதிலடி!

02/03/2026

டி20 உலக கோப்பை 2026: இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை

08/02/2026

அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்தான் எங்களின் முக்கிய இலக்கு

09/12/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved