Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

Balaji by Balaji
18/06/2026
in மாவட்டங்கள்
0
EV Velu School Thiruvannamalai

EV Velu School Thiruvannamalai

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை எ. வ. வேலு பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி படை வீராங்கனைகள் (Student Leaders & House Captains) பதவியேற்பு விழா நேற்று (ஜூன் 18, வியாழக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எ. வ. வே. கம்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கிரேசி ஆண்டனி வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

பதவியேற்பும் அணிவகுப்பும்:

விழாவில், இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற பீரங்கிப்படை மேஜர் எஸ். விமல்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர், பள்ளியின் மாணவத் தலைவிகள் மற்றும் ஆரவல்லி, இமாலயா, நீல்கிரிஸ், விந்தியா ஆகிய நான்கு படை முகாம்களின் (Houses) வீராங்கனைகளுக்குப் பதவிகளுக்கான ‘பேட்ஜ்‘ (Badge) அணிவித்து, பதவியேற்பு உறுதிமொழி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற படை வீராங்கனைகளின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையைச் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டார்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

பெண்கள் துணிச்சலுடன் சமுதாயக் கடமையாற்ற வேண்டும்: விழாவில் சிறப்பு விருந்தினர் மேஜர் எஸ். விமல்ராஜ் பேசுகையில், தான் இந்திய இராணுவ பீரங்கிப் படையில் பணியாற்றியபோது நிகழ்ந்த வீர தீர அனுபவங்களை மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், “மாணவிகள் சிறு வயது முதலே துணிச்சல், தைரியம் மற்றும் உயரிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்; நாட்டின் முன்னேற்றத்திற்காக சமுதாயக் கடமையாற்ற முன்வர வேண்டும்” என்று ஊக்கப்படுத்திப் பேசினார்.

விழாவின் நிறைவாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

Tags: EV Ve Kamban ThiruvannamalaiEV Velu School ThiruvannamalaiEVV school student council electionMajor S Vimalraj armySchool Investiture Ceremony 2026Thiruvannamalai school news today
Previous Post

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

Next Post

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
Cheyyar River

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved