Saturday, July 25, 2026
30 °c
Tiruvannamalai
32 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

முதல்வர் விஜய் அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

admin by admin
23/07/2026
in அரசியல், செய்திகள், தமிழ்நாடு
0
‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டத்தில் அரசு கவனம் செலுத்துவதாகக் கூறி, தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைக்கு இந்தச் சம்பவமே சாட்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசை நம்பி சிகிச்சை பெற வந்த பெண் கால் விரலை இழந்த நிலையில், அவருக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது? மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் சூழலில், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்து கொண்டாடி செல்ஃபி வெளியிடுகிறார். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை படம் பார்க்க ‘லீவு’ போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

AlsoRead

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

“நாடும், நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன என்ற மனநிலையுடன் ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ (Nero) அரசுக்கு எனது கடும் கண்டனம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தளப் பதிவில், “எங்களுக்கு ‘ஜனநாயகன்’ வேண்டாம்; ஜனநாயகம் வேண்டும். போராடும் மக்களை அவதூறாக பேசி கைது செய்வதுதான் ஜனநாயகமா? மக்கள் போராடும் நிலையில், மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கருத்துகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவுகளில் இடம்பெற்றவை.

Tags: எடப்பாடி பழனிசாமிமுதல்வர் விஜய்ஜனநாயகன்
Previous Post

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

Next Post

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை

Related Posts

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

25/07/2026

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்
  • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
  • 88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved