Monday, September 28, 2026
34 °c
Tiruvannamalai
29 ° Tue
28 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தடை:

தமிழக அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

admin by admin
10/08/2026
in தமிழ்நாடு
0
கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தடை:
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பணிகளுக்குத் தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கும், செயற்கை விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், தமிழ்நாடு சட்டவிரோத கனிமச் சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக அரசு திருத்தம் செய்தது.

அதன்படி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியைத் தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்களை மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யவும், திருத்தப்பட்ட விதிகளை செல்லாது என அறிவிக்கவும் மது பிரேமநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், “திருத்தப்பட்ட விதிகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். சட்டப்படி உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்குச் சொந்தமானவை. அவற்றை எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் எங்களுக்கு உள்ளது. எனவே, மூன்று மாத தடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: உயர் நீதிமன்றம் உத்தரவுகனிமங்கள்தடைதமிழக அரசு
Previous Post

வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களுக்கு அருங்காட்சியகம் எப்போது?

Next Post

நெல், கரும்பு விவசாயிகளுக்கு வரலாறு காணாத ஊக்கத்தொகை உயர்வு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved