Monday, September 28, 2026
13 °c
Columbus
17 ° Tue
18 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

admin by admin
12/08/2026
in தமிழ்நாடு
0
கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு வீட்டில் இருந்தபடியே இணையவழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டு வரை இந்த இடங்களுக்கு தனித்தனியாக கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறும் நடைமுறை இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 11-ம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, வனத்துறையின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, மொபைல் செயலிகள் உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சுற்றுலா இடங்கள் மற்றும் வாகனங்களுக்கான கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நுழைவுப் பகுதியான பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் கியூஆர் குறியீடு மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், அப்பர் லேக் வியூ ஆகிய 5 இடங்களில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் நுழைவுச்சீட்டை காண்பித்து சுற்றுலா இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இந்நிலையில், நுழைவுச்சீட்டு பெறுவதை மேலும் எளிதாக்கும் வகையில், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் நுழைவுச்சீட்டு பெறும் வசதியை கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, https://kodaikanalwildlifesanctuary.com/ticket/book என்ற இணையதளத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து, பெயர், பயண தேதி, பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் எண்ணிக்கை, இந்தியர் அல்லது வெளிநாட்டினர், பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் மற்றும் கேமராவுக்கான கட்டணம் ஆகியவற்றை இணையவழியில் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை கொடைக்கானல் வரும் நாளில் பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் வனத்துறை பணியாளர்களிடம் காண்பித்து, சுற்றுலா இடங்களுக்குச் செல்லலாம்.

இந்த நுழைவுச்சீட்டு 24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, சுற்றுலாப் பயணிகள் வனத்துறை சுற்றுலா இடங்களுக்குச் செல்ல விரும்பும் தேதியை முன்கூட்டியே தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை இணையவழியில் செலுத்தி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

Next Post

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved