Monday, September 28, 2026
13 °c
Columbus
17 ° Tue
18 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

admin by admin
12/08/2026
in தமிழ்நாடு
0
தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சட்டம்–ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தியுள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதே காலகட்டத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதற்கும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், போலீசாரின் தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீதான கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிடியாணைகளை நிறைவேற்றும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. சட்டம்–ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags: தமிழகம்போலீஸ் அதிரடிரவுடிகள் கைது
Previous Post

“மொழி எனக்கு ஒரு பிரச்சினைதான்; தாய்மொழி தமிழ்தான்”

Next Post

கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு வீட்டிலிருந்தே இணையவழி நுழைவுச்சீட்டு பெறும் வசதி

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved