Thursday, August 13, 2026
29 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

admin by admin
13/08/2026
in வானிலை
0
தமிழகத்தில் நாளை முதல் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் நாளை (ஆக.14) முதல் ஆக.19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.14) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

AlsoRead

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆக.16, 17-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.18-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். ஆக.19-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவு

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சோலையாறில் 5 செ.மீ., சின்னக்கல்லாரில் 4 செ.மீ., கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Tags: கனமழைதமிழகம்மிதமான மழைவானிலை
Previous Post

தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்

Next Post

மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

Related Posts

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

03/08/2026
மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு

24/07/2026

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03/03/2026

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

28/02/2026

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

21/11/2024

5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது!

04/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • 100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு
  • அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?
  • பருவமழைக்கு முன்பே ஏரி, குளங்களைத் தூர்வார வேண்டும்
  • பட்டாசு ஆலையில் இயந்திர சோதனையின்போது வெடி விபத்து
  • மதுவுக்கு எதிரான விழுந்தமாவடி மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved