Wednesday, July 29, 2026
29 °c
Tiruvannamalai
32 ° Thu
32 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

1,000 முதல்வர் மருந்தகங்கள்: பிப்.24ல் முதலமைச்சர் திறப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
12/02/2025
in தமிழ்நாடு
0
1,000 முதல்வர் மருந்தகங்கள்: பிப்.24ல் முதலமைச்சர் திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாடு முழுவதும் 1,000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ வரும் 24ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலமாக www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுவரை முதல்வர் மருந்தகம் அமைக்க மொத்தமாக 840 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த இடமாக இருந்தாலும், அதற்கான சான்றிதழ் மற்றும் சொத்து வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், உரிமையாளர்களிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாகவே முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் 24ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் இரு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் கொடுக்கப்படும். அவர்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளித்த பின் மானியத் தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும்.

AlsoRead

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

இதன்பின் ரூ.1.50 லட்சத்திற்கு மருந்துகள் அளிக்கப்படும். அதேபோல் விற்பனைக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்கள் மூலமாக மக்கள் மருந்துகளை குறைந்த விலையில் வாங்கலாம்.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ்மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: MKStalinmuthalvar marunthagamTamilnadu CM
Previous Post

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

Next Post

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

Related Posts

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

28/07/2026
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

28/07/2026

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

28/07/2026

காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

25/07/2026

88வது பிறந்த நாளில் அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்

25/07/2026

மாணவர் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி; அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

25/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்
  • மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது
  • மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்
  • கேரளாவுக்கு கருங்கல் ஜல்லி கொண்டு செல்லும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:
  • இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved