Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
21/03/2025
in மாவட்டங்கள்
0
திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் காரில் வந்த ஆடு திருடர்கள் மாலா என்பவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகளைத் திருடி காரில் ஏற்றினர். அப்போது மாலா கூச்சலிடவே கிராம மக்கள் காரை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அந்தக் கும்பல் காரை விட்டுவிட்டு தப்பி ஓடியது. காரில் வந்த ஒரு பெண் உட்பட 3 பேர் இந்த ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கிராம மக்கள் ஒலக்கூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஒலக்கூர் போலீசார், பொதுமக்கள் சிறைபிடித்த காரை சோதனையிட்டதில் அந்தக் கார் போலி பதிவு எண் கொண்டது எனத் தெரியவந்தது. இதனை அடுத்து கார் மற்றும் ஆடுகளை காவல் நிலையம் எடுத்து வந்து தப்பி ஓடிய ஆடு திருடர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடு திருட்டு சம்பவத்தில் தப்பி ஓடியவர்களில் ஒரு பெண் மட்டும் போலீசில் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஊமங்கலம் சிவக்குமார் மனைவி சரோஜினி தேவி என்றும், இந்த ஆடு திருட்டில் தன்னுடன் ஈடுபட்டது காஞ்சிபுரம் லோகன் மகன் சரத்குமார் மற்றும் தாம்பரம் செல்வகுமார் மகன் வெற்றி என்றும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சரோஜினி தேவி அளித்த தகவலின் பேரில் தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: stole sheepTindivanam News
Previous Post

கடலூர் அருகே சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது

Next Post

திருக்கோவிலூர் அருகே ஒரே மாதத்தில் மீண்டும் சேதமான பாலம்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved