Friday, July 24, 2026
23 °c
Columbus
22 ° Sat
24 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகுவதே மரியாதை’ : ஓபிஎஸ் பகீர் பேச்சு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
27/03/2025
in தமிழ்நாடு
0
இ.பி.எஸ் அ.தி.மு.க.,வை சின்னாபின்னமாக்கி விட்டார் : ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு மரியாதை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

“ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருக்கவே தகுதியற்றவர். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான். அ.தி.மு.க.வை ஒருபோதும் எதிரிகளிடம் அடமானம் வைக்கமாட்டோம். தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம்” என்று அவர் கூறியிருந்தார

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,

“தமிழகத்தில் அ.தி.மு.க.எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார்.

ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்
சூழல் உருவாகும் என கூறுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Tags: AIADMKEdappadi PalaniswamiOPanneerselvam
Previous Post

கவுன்சிலர்களின் சரமாரி கேள்வி; பெண் பொறியாளர் கண்கலங்கிய சம்பவம்

Next Post

இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா : முதலமைச்சர்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved