Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாளை திறப்பு

நாளை பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
05/04/2025
in தமிழ்நாடு
0
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாளை திறப்பு
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ராமேஸ்வரத்தில் நாளை புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி, அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில்வே தூக்கு பாலத்திற்கு பதிலாக சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், சோதனை ஓட்டம் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

நூற்றண்டு பழமையான பாம்பன் தூக்கு பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில்வே பாலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை நாளை (6ம் தேதி) ராம நவமியை முன்னிட்டு நண்பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிலையில், இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை 10:40 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி, மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்திற்கு 11.45 மணிக்கு வந்து இறங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹெலிபேட் தளத்திலிருந்து சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்தின் நடுவே உள்ள மேடைக்கு சென்றடையும் பிரதமர் நண்பகல் 12 மணி அளவில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

இன்று ராமநவமி என்பதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு 12.40 மணி அளவில் செல்லும் பிரதமர், பிற்பகல் 01.15 மணி வரை சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 2.30 மணி வரை பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் வாலாஜாபேட் – ராணிப்பேட்டை இடையிலான 4 வழிச்சாலை உள்ளிட்ட நிறைவு பெற்ற நெடுஞ்சாலை பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: NarendramodiPamban new railway bridgeRameshwaram
Previous Post

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Next Post

தமிழகத்துக்கு ரூ.522 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு அறிவிப்பு

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
PMK Swaminathan

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

05/03/2026

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved