கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாஜித் என்ற மாணவன் விஜய் டிவியில் நடைபெற்ற “நீங்களும் ஆகலாம் கலாம்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினார்.
மாணவனின் கண்டுபிடிப்பானது நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை முன் நிறுத்துவதாக அமைந்தது . விவசாய நிலத்தில் பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக எதிர்பாராத நேரத்தில் வன விலங்குகள் பயிர் பகுதிக்கு வருவதை சென்சார் மூலமாக கண்டறிதல் , தாவரங்களுக்கு எளிதாக பரவும் நோய்களை கண்டறிந்து எளிதான முறையில் தீர்வு காண்பது போன்றவற்றை அவர் கண்டறிந்துள்ளார்.
இதையொட்டி, கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா ஆகியோர், மாணவனைப் பாராட்டி அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.



