திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய பூனிமாங்காடு கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பூனிமாங்காடு, மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்களுக்கு கூடுதலான வகுப்பறை கட்டிடங்கள் தேவை என மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வகம் அமைக்க ரூ. 1 கோடி

யே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்குண்டான கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தொடங்கி வைத்தார். பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பள்ளி புதிய வகுப்பறையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், முருகன். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார். மாவட்ட பிரதிநிதி ஒப்பந்ததாரர் எஸ். கமலநாதன் மற்றும் பூனிமாங்காடு வெங்கடாஜலம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



