ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் சுந்தர், நகரபொறுப்பாளர் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மணிமாறன் ஆகியோர் ஊராட்சிமன்ற அலுவலக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஆரணி எம்.பி, எம்.எஸ். தரணிவேந்தன் மற்றும் செய்யறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திமுக துணைசெயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றியசெயலாளர்கள் எஸ். எஸ்.அன்பழகன், துரைமாமது, முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.புஷ்பராஜ், ஒன்றிய துணைசெயலாளர்கள் குமரேசன், அன்பு, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்யாறு ஒன்றியத்தைச்சேர்ந்த மேல்மட்டைவிண்ணமங்கலம் கிராமத்தில் ரூ.5லட்சம் மதிப்பில் உயர்மின்கோபுர விளக்கையும் தரணிவேந்தன் இயக்கி வைத்தார்.
மேலும் புதுக்கோட்டை ஊராட்சியில் பகுதி நேர நியாய விலைக்கடையும், மேல்நகரம்பேடு கிராமத்தில் ரூ.15லட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலைகட்டிடத்தையும், நாவல்பாக்கம் கிராமத்தில் ரூ.16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடிகட்டிடத்தையும் ஆகியவற்றை எம்.எஸ். தரணிவேந்தன் திறந்து வைத்தார்.
ஆரணி மத்திய ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். செய்யாறு வட்டாட்சியர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



