Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம்”

மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அறிக்கை

admin by admin
24/11/2025
in செய்திகள், மாவட்டங்கள்
0
“கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை நோக்கி பயணிப்போம்”
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் அனைவரும் வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திட, மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெறப்போகும் வெற்றியை, தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதியார் கரங்களில் ஒப்படைத்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.

அதற்கு அச்சாரமாக, தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகளில் கழகத்தினர் தம்மை முழுநேரமும் ஈடுபடுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து தகுதியான வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்திட வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர் குறித்த தகவல்களை உடனடியாக மாவட்டக் கழக அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், பேரிடரால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளும் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

மக்கள் பணியே மகேசன் பணி எனும் கோட்பாட்டினை மனதில் ஏந்தி, மக்களின் வாக்குரிமை காக்கும் பணிகள், இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களை காக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் தங்களை முழுநேரமும் ஈடுபடுத்தி உழைத்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கவனச் சிதறல்கள் ஏதுமின்றி, காலம் பொன் போன்றது என்பதனை மனதில் கொண்டு தேவையற்ற செயல்களுக்கு சமூக வலைத்தளங்களில் நேரத்தினை விரயம் செய்திடாமல், இருக்கின்ற குறுகிய காலத்தில் நமது இலக்கினை நோக்கி உழைப்பினை செலுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மக்கள் பணியாற்றிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags: கள்ளக்குறிச்சிவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.
Previous Post

கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post

சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved