திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 அரசு பள்ளிகளில் படிக்கும் 2024 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.
வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருதாடு, கீழ்க்கொடுங்காலூர், இரும்பேடு, தேசூர், மழையூர், பொன்னூர், மற்றும் தூய நெஞ்ச மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 16 பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பாடம் பயிலும் 2024 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.
நாட்டு பண் சிறப்பான முறையில் பாடிய வந்தவாசி தூய நெஞ்ச மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விழா மேடையிலே பேனாக்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.
விழாவில் நகரமன்றத் தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தயாளன், நகர மன்ற உறுப்பினர்கள் கிஷோர்குமார், அன்பரசு, நூர் முகமது, மகேந்திரன், பள்ளி மேலாண்மை குழு மணிகண்டன், குடியரசு, அருள், பாபு, சலீம், விக்டர், மற்றும் 16 பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



