Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு: கூடுதல் தொகுதிகள் கோரி உறுதியாக சிபிஎம்

Balaji by Balaji
17/03/2026
in தமிழ்நாடு
0
CPM Shanmugam statement

CPM Shanmugam statement

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக–மார்க்சிஸ்ட் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றுள்ளதால் பேச்சுவார்த்தையை உடனடியாக நிறைவு செய்ய சிரமங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூடுதல் தொகுதிகள் கோரிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து இன்று இரவு பதில் அளிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

AlsoRead

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதால், தொகுதி பங்கீட்டை முடிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதனை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் சண்முகம் கூறினார்.

“ஒவ்வொரு கட்சியும் அதன் அரசியல் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகிறது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் பெற்றது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய பலத்திற்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

Tags: CPM Shanmugam statementDMK alliance newsDMK CPM talksIndia political newsseat sharing negotiationsseat sharing Tamil NaduTamil Nadu election allianceTamil Nadu Politics 2026
Previous Post

“காலம் பதில் சொல்லும்!” – த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

Next Post

மக்களவை அதிரடி: சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

Related Posts

Raghava Lawrence

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

12/06/2026
SrivaiKuntam

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

10/06/2026

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

10/06/2026

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

08/06/2026

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved