கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளைச்சேர்ந்த திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், கள்ளக்குறிச்சி தெற்கு செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் மற்றும் பாசு முகவர்கள் சிறப்புத்தீவிர திருத்தத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் உட்பட உறுப்பினர்கள், தொகுதி சட்டமன்ற,நாடாளுமன்ற பார்வையாளர்கள். மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், பாசு முகவர்கள் கலந்து கொண்டனர்.



