வேலூர் அண்ணாசாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதி உதவிப்பள்ளி) சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் நேற்று பள்ளிக்கு 100 மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
அவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது ஒரு மாணவனின் தட்டில் இருந்த சத்துணவில் பல்லி கிடந்ததாக மாணவன் கூறினான்.
இந்நிலையில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் 97 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களில்
இரண்டு மாணவர்கள் வேலூர் அரசு பென்ட்லான்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனரா மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில் சில மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.யாருக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றனர்.



