விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கைக்குழந்தைகளுடன் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டைகேட்டு மனு அளித்தார்.
சட்டமன்றத் விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பானாம்பட்டு கிராமம் பொண்ணம் குப்பம் நகரில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள கால்நடை மருத்துவமனை பின்புறத்தில் சிறிய அளவில் கொட்டா போட்டு வசித்து வருபவர் பழங்குடி இருளரைச் சேர்ந்த அருள். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு திருமணம் ஆகி விக்னேஷ், பார்த்தா தன்ஷிகா உள்ளிட்ட நான்கு குழந்தைகள் உள்ளன.
இவரது கணவர் அருள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி கை கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார் இதனைத் தொடர்ந்து விஜயா பிளாஸ்டிக் குப்பைகளை பொறுக்கி தங்களுடைய குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் இவர் பிள்ளைக்கு ஆதார் எடுப்பதற்கு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது அப்பொழுதுதான் இவருக்கு ஆதார் என்னவென்றே தெரியாமல் போனது.
பின்னர் குடும்ப அட்டையும் இவர்களுக்கு இல்லை. அதே போன்று வாக்காளர் அடையாள அட்டையும் இதுவரை இல்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களாக பொறம்போக்கு இடத்தில் கொட்டாய் போட்டு வசித்து வருகின்றனர்.
தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு ரேஷன் கடையில் இலவசமாக வழங்கக்கூடிய அரிசி பருப்பு உள்ளிட்டு வழங்குவதற்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க வேண்டும் பழங்குடி இருளர் ஜாதி சான்றும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



