சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான இரும்புத் தூண்கள் மற்றும் உத்திரங்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள பென்னர் இரும்பு தொழிற்சாலையில் தயாராகின்றன.
இந்த தொழிற்சாலையை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்ற நிலையை ஆய்வு செய்தார்.
இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் மற்றும் தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



