Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/03/2025
in மாவட்டங்கள்
0
செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகிய சகோதரிகளின் பூர்வீக நிலம் செஞ்சி அருகே உள்ளது. இந்த நிலம் தொடர்பான பட்டா ரத்து குறித்த விசாரணை திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெறுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் இவர்களது எதிர் தரப்பை சேர்ந்த முனுசாமி என்பவரது தரப்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

இந்நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து சகோதரிகள் மூவரும் அவர்களது 74 வயது சகோதரர் ராஜரத்தினத்துடன் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தனர். ராஜரத்தினத்திற்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், இதய கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காலை 11 மணி அளவில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற முதியவர் நெடுநேரமாகியும் வெளியே வராததால் சகோதரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மயக்கமுற்று சாய்ந்த நிலையில் கிடந்த அவரை அலுவலக ஊழியர்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது பிரேதத்தை சகோதரிகள் பெங்களூருக்கு எடுத்துச் சென்றனர்.

Tags: arunai thamizhTamil News TodayTindivanam News
Previous Post

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப். 24க்கு ஒத்திவைப்பு

Next Post

திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved