Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நீட் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை : தேசிய தேர்வு முகமை வெளியீடு

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
03/05/2025
in இந்தியா
0
நீட் தேர்வர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை : தேசிய தேர்வு முகமை வெளியீடு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று (4ம் தேதி) நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 23 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர். தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.

இந் நிலையில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

1. தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (hall ticket) https://neet.nta.nic.in/ என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் என்றால் 011 40759000 அல்லது 011 69227700 என்ற தொலைபேசி எண்கள், neetug2025@nta.ac.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

3. தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையை பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம்.

4. ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் எந்த ஆடை அல்லது ஆபரணங்களை தவிர்க்க வேண்டும்.

ஆண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆடை நடைமுறைகள்;

1. வெளிர்நிற அரைக்கை சட்டைகள், டி சர்ட்டுகள்(பெரிய பொத்தான்கள்,எம்பிராய்டரி கூடாது)

2. எளிமையான கால் சட்டைகள்

3. மெல்லிய காலணிகள்

ஆண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;

1. முழு கைச்சட்டைகள் அணியக்கூடாது

2. பெரிய பொத்தான்கள் கொண்ட பைகள், ஆடைகள்

3. ஷுக்கள்

4. கடிகாரங்கள், வளையல்கள்,சங்கிலிகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்) போன்ற எந்த ஆபரணங்கள்

பெண் தேர்வர்களுக்கான ஆடை நடைமுறைகள்;

1. ஆபரணங்கள், அலங்காரங்கள் இல்லாமல் லேசான, எளிய மற்றும் வசதியான ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

2.விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள்

3. சல்வார் அல்லது பேண்ட்

4. செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகள்

பெண் தேர்வர்களுக்கான அனுமதிக்கப்படாத ஆடை நடைமுறைகள்;

1. முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை

2. ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள்

3. நகைகள்(காதணிகள், மூக்குத்திகள், சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகள்)

4. அதிக உயரம் கொண்ட (high) ஹீல்ஸ், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகள்

தேர்வுக்கூட அறையில் தேர்வர்கள் கொண்டு செல்லவேண்டிய மற்றும் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத பொருட்கள் என்ன என்ற விவரத்தையும் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

1. பாஸ்போர்ட் அளவில் புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு நகல் (விண்ணப்ப படிவத்தின் போது பதிவேற்றப்பட்டது போல இருத்தல் கட்டாயம்)

2. வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றியது போன்றது)

3. அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஒன்று

4. பால்பாயிண்ட் பேனா(நீலம்/கருப்பு)

5. முகக்கவசம் மற்றும் சானிடைசர் (சிறிய பாட்டில்)

அனுமதிக்கப்படாத பொருட்கள்;

1. மொபைல்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள்

2. எழுது பொருட்கள்(அனுமதிக்கப்பட்ட பேனாவை தவிர)

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

3. பணப்பைகள், கைப்பைகள், குளிர் கண்ணாடிகள்(சன் கிளாஸ்)

4. சாப்பிடக்கூடிய பொருட்கள், அடைத்து வைக்கப்பட்ட உணவு அல்லது பானங்கள் ( மருத்துவ உபாதைகள் உள்ளவர்களை தவிர)

5. அச்சிடப்பட்ட, கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டுச்சீட்டுகள்

தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும். முன்னதாக சோதனை மற்றும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்யப்படும். மதியம் 1.30 மணிக்கு பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை.

Tags: Guidelines for NEETmedical educationNational Testing Agency
Previous Post

“இன்று முதல் கத்திரி வெயில்” அச்சத்தில் இருந்த மக்களுக்கு நல்ல சேதி வந்தாச்சு மழை..! மழை..! மழை..!

Next Post

அமைச்சர்கள் அதிக நாட்களை மாவட்டங்களில் செலவிடுங்கள் – முதலமைச்சர்

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved