Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழகம் பெருமை கொள்கிறது என வாழ்த்து

admin by admin
12/12/2025
in இந்தியா, செய்திகள்
0
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஐநாவின் உயரிய விருதுபெற்ற, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐநாவின் உயரிய விருதான “சாம்பியன்ஸ் ஆப் எர்த்” விருது சுப்ரியா சாகுவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இவ்விருது இயற்கை பாதுகாப்பில் அவர் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டு உள்ளது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது, தமிழகம் பெருமை கொள்கிறது.
கா நி ல லை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழகம் சிறப்பான இடத்தைப்பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐநாவின் ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்” விருதினை வென்றுள்ள தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள்! சதுப்பு நிலம் பாதுகாப்பு,
அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

யார் இந்த சுப்ரியா சாகு?
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றியவர். இவர் கலெக்டராக இருந்த போது தான், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. சுப்ரியா சாகு, தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல் ஆகவும், இன்கோசர்வ் முதன்மை செயல் அதிகாரியாகவும், சுகாதாரத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர். தற்போது, அவர் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார். தற்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்குத் தலைமை தாங்குகிறார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ஐ.நா. விருதுசுப்ரியா சாகுமுதல்வர் மு.க.ஸ்டாலின்
Previous Post

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை”

Next Post

திருப்பத்தூர் ஆட்சியரிடம் புகார் கொடுக்க கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved