விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர்.
வேப்ப மரத்தின் கீழே பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக 140 செ.மீ. உயரமும், 74 செ.மீ. அகலமும் கொண்ட இந்த மூத்ததேவி சிற்பமானது, வலது காலை அகற்றி சற்று மடித்த நிலையிலும், இடது காலை அகற்றி வைத்தவாறும் வலதுகரத்தில் அல்லி மொட்டு காணப்படுகிறது ஏந்தியவாறும், இடதுகரம் இடது தொடையின் மீது வைத்தவாறும் காதில் தடித்த குண்டலங்களுடனும் காணப்படுகின்றன.
பருத்த மார்பகமும், பெரிய வயிறும் மூத்ததேவியின் அடையாளத்தை காட்டுகின்றன. மூத்ததேவியின் வலது, இடதுபுறங்களில் மாந்தன், மாந்தினி காட்டுவது வழக்கம். ஆனால் இங்கு தேவி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. காக்கை கொடியோ,கழுதைவாகனமோ இவை யாவும் காட்டப்ப டாமல் எளிமையான கிராமிய காட்டப்படாமல் மூத்த கலைப்பாணியில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் கலை அமைப்பு பல்லவர் காலத்தை சார்ந்துள்ளது. இவ்வூரில் ஏற்கனவே இவர்களால் பல்லவர் காலத்தைச் சேர்ந்த யானை மேல் முருகன் சிற்பம் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்லவர் காலத்தில் இந்த ஊர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியது தெளிவாகிறது.



