Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/01/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சங்கராபுரம் அருகே பைக் வாங்கித் தராத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள புதுப்பாலப்பட்டு  கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் -அபரஞ்சம் தம்பதியினர்.

இவர்களுக்கு மாதேஸ்வரன் ராகுல் மற்றும் கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.  மூத்த மகனான மாதேஸ்வரன் பி.பி.ஏ, கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

AlsoRead

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

இந்நிலையில் மாதேஸ்வரன் தனது தாய் தந்தையிடம் எனக்கு ஆர்-15 விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுங்கள் என்று நீண்ட நாட்களாக கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தந்தை நடேசன்  சிறிது காலம் கழித்து  சோளம் அறுவடை செய்து முடித்தவுடன் வாங்கிக் தருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு மாதேஸ்வரன் கடந்த இரண்டு நாட்களாக அடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த மாதேஸ்வரன் பெற்றோர்களான நடேசன் மற்றும் அபரஞ்சம் காட்டிற்கு வேலைக்குச் சென்ற நேரத்தை பயன்படுத்தி தனது தாயின் சேலையில் பரிதாபமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித்தர மறுத்ததால் விரக்தியில் மாதேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் மாதேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றபோது, அவரது பெற்றோர்களும்  உறவினர்களும் எங்களது மகனின் பிரேதத்தை எடுத்துச் செல்ல வேண்டாம் என காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 4 மணி நேரத்திற்குப்பின், சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகனின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மாதேஸ்வரன் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைக் வாங்கித்தராத விரக்தியில் தாயின் சேலையில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Kallakurichi Crime NewsSankarapuram NewsYouth Suicide
Previous Post

சங்கராபுரம் அருகே ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி:பொதுமக்கள் குற்றச்சாட்டு

Next Post

ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது

Related Posts

tamilnadu Govt

தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

06/03/2026
mkstalin

“2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!

06/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!
  • “16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்கள் தடை” – கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி!
  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved