Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொகுதி மறுவரையறை என்பது பல மாநிலங்களின் பிரச்சினை – முதலமைச்சர்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
09/03/2025
in தமிழ்நாடு
0
mkstalin

mkstalin

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை. தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை என்று திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கூறியுள்ளார்.

தி.மு.க, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், நேற்று (9ம் தேதி) காலை 11 மணிக்கு, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை. தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை.

எனவே, தி.மு.க., எம்.பி.,க்கள் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி., அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பில் தேசிய அளவிலான கவனத்தை இருக்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான். உடனடியாக டெல்லியில் தமிழக எம்.பி.,க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்டு செயலாற்றிட வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தி.மு.க., எம்.பி.,க்கள் இருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை என பா.ஜ.க, அரசு வஞ்சிக்கிறது. நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும். இந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும், ஒருங்கிணைத்து களம் காண்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

முன்னதாக, ‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம். மாநில உரிமைகளை நிலைநாட்ட அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒன்றிணைத்து களம் காண்போம்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பாக மற்ற மாநிலங்களுக்கு அமைச்சர்கள் சென்று அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு டி.ஆர்.பி. ராஜா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்மானம் 1

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்; தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன்,

தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு,மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2

மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்;

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கு ஆதரவாக நின்று,

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3

தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம்

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து,

கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags: Constituency redelineationMKStalinTamilnadu CM
Previous Post

மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாம்?

Next Post

இந்தியாவும் அமெரிக்காவுக்கு ‘வரிக்கு வரி’ – சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved