Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் தொடக்கம்: வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

உறுப்பினர்களுக்கு இலக்கு நிர்ணயித்து கொடுத்தார்

admin by admin
11/12/2025
in தமிழ்நாடு
0
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் தொடக்கம்: வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இலக்கு நிர்ணயித்து கொடுத்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவரும். முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
திமுக தலைவரும். தமிழ்நாடு முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (10.12 2025) மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122-வது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

“தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR) திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் BLO மற்றும் வாக்காளர்களுக்கு உதவிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

பரப்புரையின் இரண்டாம் கட்டம் இன்று (நேற்று) முதல் தொடங்குகிறது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை, பகுதி,ஒன்றியம், நகரம், பேரூர் கழக செயலாளர்கள் 68,463-க் கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்றதேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி/ஒன்றியம்/நகரம்பேரூர் கழக செயலாளர்களுடன் – 78கழக மாவட்ட செயலாளர்கள், 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68.463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 6.8 லட்சம் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் பரப்புரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள். வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுகநிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார்.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து திமுக தலைமையில் சமர்ப்பித்தனர். மேற்கண்டவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: என் வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடிமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் காவலர்கள் ‘கடும் கெடுபிடி’யுடன் நடந்து கொள்வதாக புகார்

Next Post

“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராத ஒன்றிய அரசு, எஸ்.ஐ.ஆரை. மட்டும் வலிந்து திணித்துள்ளது”

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

25/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved