வந்தவாசியில் திமுக சார்பில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களை சந்திக்கும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தில் வாக்குச்சாவடி எண் 57. ல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் பேசுகையில், இந்த வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை கொண்டு வந்த மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான நிதியைத்தருவதில்லை, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது. கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
புயல் முழுமையாக தராமல் சேதங்களில் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய அத்தனை நிதிகளையும் நிறுத்தி வைத்துவிட்டு, வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை (எஸ்ஐஆர்) மட்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதம அமைச்சர்களில் பாகுபாடு மிக்க பிரதமராக நரேந்திர மோடி விளங்கி வருகிறார்” என்றார். ஒன்றியச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் படுர் வெங்கடேசன், பயர் விக்டர். அரசூர் கிளைக்கழக செயலாளர், பிரதிநிதிகள், வாக்குச்சாவடி மக்கள் கலந்து கொண்டனர்.



