Friday, July 10, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

Balaji by Balaji
25/05/2026
in தமிழ்நாடு
0
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

“தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்தச் சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்பதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்

தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை ஊடகங்களில் வந்த சம்பவங்கள் மட்டுமே. ‘மாற்றம், மாற்றம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக மாறியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சியாகும்.

கோவை சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சூலூர் சிறுமியின் தாயாருக்குக் கூடத் தெரிவிக்காமல், அவசர அவசரமாகச் சிறுமியின் உடல் எரிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடரும் வன்முறைகள்

மேலும், கோவையில் இளம்பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில், போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

“முதல்வரே, இது தமிழ்நாடா அல்லது உத்தரப் பிரதேசமா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்துடைப்புக் கூட்டம்

தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களைப் பேசிய முதல்வர், தற்போது குற்றங்கள் அதிகரிக்கும் போது வாய் திறக்க மறுப்பது ஏன்? எங்கே போனது உங்களது ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’?

குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வரும் சூழலில், இன்று காலை கண்துடைப்பிற்காகக் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் கடமை

நிலைமையின் தீவிரத்தை அரசு முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் சொல்லி ஆக வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags: CM VijayCrime NewsLaw and OrderMK Stalintamil naduTamil Nadu PoliticsUdhayanidhi Stalin
Previous Post

2 வாரங்களில் 4-வது முறையாக உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை; மக்கள் தவிப்ப்பு

Next Post

ராஜஸ்தானை உலுக்கிய மாபெரும் புழுதிப் புயல்: உருவாகக் காரணம் என்ன?

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Vigilance Search TN Government Offices

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved