திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து செல்லக்கூடிய தேர்களை 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் நகர குற்றப்பிரிவு காவல் நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகர்த்தி நிறுத்தும் பணி நடைபெற்றது.
சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை செய்த பின்னர் பக்தர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் நகர்ப் புற குற்றப்பிரிவு காவல் நிலையம் அருகில் நகர்த்தி நிறுத்தி வைக்கும் பணி நடைபெற்றது.
தொடர்ந்து கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு தேர் மாற்றி நிறுத்தி வைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



