Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முருகன் கோயில் தேரோட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
27/01/2024
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
முருகன் கோயில் தேரோட்டம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

தைப்பூச திருவிழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி சுவாமி நிலத்தில் புற்றுமுன் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடும், பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பால் குட ஊர்வலமும், சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இத்தனை தொடர்ந்து நேற்று மாலை விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.


பெண்கள் மட்டும் விழாவின் முக்கிய நாளான இன்று காலை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் எங்கும் காணாத வகையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை நிலை பெயர்த்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவில் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் 10000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் காலை முதல் இரவு வரை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், நாளை (மறுநாள் ( திங்கட்கிழமை ) விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், வருகிற 30-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்கள் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர், விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags: ஆயிரக்கணக்கான பக்தர்கள்சாமி தரிசனம்தர்மபுரிதைப்பூச தேர்த்திருவிழா
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை

Next Post

முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம்

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

30/03/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved