Tuesday, September 22, 2026
13 °c
Columbus
16 ° Wed
16 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பெரும்பான்மை உறுதியாகாத நிலையிலும் விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை

“ஜோசப் விஜய் எனும் நான்” என பிரபலங்கள் பதிவு

admin by admin
09/05/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
பெரும்பான்மை உறுதியாகாத நிலையிலும் விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்காத நிலையிலும், திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது.

ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்ட இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு அவசியமான நிலையில், அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடித்து வருகிறது.

இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியானது. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே, அந்த தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறுத்தது.

இந்நிலையில், அந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலக பிரபலங்கள் பலர் “ஜோசப் விஜய் எனும் நான்” என்ற வாசகத்துடன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் குஷ்பு சுந்தர் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இதே வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அதேபோல் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பதிவில், “தலைவன் முதலமைச்சராக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதள பதிவில், “இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்புக்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கான புதிய நம்பிக்கையை மக்கள் வழங்கிய ஆணை” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் ஆட்சியமைப்பாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களின் இந்த தொடர் வாழ்த்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

Tags: தேர்தல் 2026விஜய்க்கு திரையுலக வாழ்த்து மழை
Previous Post

புதிய ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Next Post

அமெரிக்கா – ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved