Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Balaji by Balaji
04/06/2026
in மாவட்டங்கள்
0
Arni News Today

Arni News Today (Representative image)

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

AlsoRead

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

ஆரணி தாலுகா அலுவலகத்தின் கீழ் ஆரணி, அகராப்பாளையம், கண்ணமங்கலம், முள்ளிப்பட்டு, எஸ்.வி.நகரம் ஆகிய 5 பிர்காக்கள் உள்ளன. இதன் கீழ் உள்ள 52 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், தமிழ் நிலம் திருத்தம், மூத்த குடிமகன் சான்று, விதவை சான்று, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கணினி பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக நாள்தோறும் விண்ணப்பித்து வருகின்றனர்.

அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

தற்போது அரசு சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இருந்தபோதிலும், அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் தாமதத்தால் இந்த வசதி பயனற்றுப் போவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பிறப்பு, இறப்பு சான்றுகள் மற்றும் பட்டா பெயர் மாற்றங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் ஆய்வாளர் (RI) மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள் நேரில் விசாரணை நடத்திய பிறகும், சான்றுகளை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கீழ்நிலை அதிகாரிகள் பரிந்துரை செய்த கோப்புகளையும் வட்டாட்சியர் (தாசில்தார்) ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

வட்டாட்சியர் மாயம்?

இதுகுறித்து வட்டாட்சியரை நேரில் சந்தித்து முறையிடச் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான நேரங்களில் அவர் அலுவலகத்தில் இருப்பதில்லை எனத் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் கேட்டால், அவர்கள் முறையாகப் பதில் அளிப்பதில்லை. ‘அலுவலக வேலையாக வெளியில் சென்றுள்ளார்’ என்றே சாக்கு போக்கு சொல்கிறார்கள். இதனால் பல மணி நேரம் பசியோடு காத்திருக்கும் முதியவர்களும் பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்,” என்று பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர்.

வேறு வழியின்றி, பொதுமக்கள் தங்களின் மனுக்களை அங்குள்ள உதவியாளர்கள் மற்றும் எழுத்தர்களிடம் (கிளார்க்) கொடுத்துவிட்டுச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

லஞ்சப் புகார்

வங்கிக் கடன், விதவை உதவித்தொகை மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற முடியாமல் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் வேளையில், தாலுகா அலுவலகத்தில் லஞ்ச நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேர்மையான முறையில் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் வாரக்கணக்கில் கிடப்பில் போடப்படும் நிலையில், லஞ்சம் கொடுக்கும் நபர்களின் மனுக்கள் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலை முடித்துக் கொடுக்கப்படுவதாகப் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

கோரிக்கை

பட்டா மாற்றம், யூடிஆர் (UDR) திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சான்றிதழ்களுக்காகக் காத்திருக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஆரணி தாலுகா அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் மனுக்கள் மீது வட்டாட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி, தகுதியான சான்றிதழ்களை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Arni News TodayArni Tahsildar OfficeArni Taluk OfficeCertificates DelayFarmers Protest ArniPatta Transfer DelayPublic Grievances Tamil NaduRevenue Department Arnitiruvannamalai news
Previous Post

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

Next Post

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

Related Posts

police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026
யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved