Wednesday, August 5, 2026
31 °c
Tiruvannamalai
31 ° Thu
29 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

பவுனுக்கு ரூ.2,240 அதிகரிப்பு

admin by admin
05/08/2026
in வர்த்தகம்
0
சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னையில் இன்று (ஆக. 5) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என இருமுறை உயர்ந்து, பவுனுக்கு மொத்தம் ரூ.2,240 அதிகரித்துள்ளது.

காலை வர்த்தகம் தொடங்கியபோது, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,360-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,880-க்கும் விற்பனையானது.

AlsoRead

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

இதனைத் தொடர்ந்து மாலை நேரத்திலும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. கிராமுக்கு கூடுதலாக ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கும், பவுனுக்கு மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதன்மூலம், இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு மொத்தம் ரூ.280 மற்றும் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று காலை உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும் விற்பனையாகி வருகிறது. மாலை நேரத்திலும் அதே விலை நீடித்தது.

விலையேற்றத்துக்கு என்ன காரணம்?

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை மற்றும் உலக பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும், உலகின் முக்கிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சர்வதேச சந்தை மாற்றங்கள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமும் உலகளாவிய தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியதையடுத்து, தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. நேற்று (ஆக. 4) பவுனுக்கு ரூ.400 குறைந்திருந்த தங்கம், இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: சென்னைதங்கம் விலை
Previous Post

தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

Next Post

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

Related Posts

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

30/07/2026
தங்கம் விலை மீண்டும் உயர்வு:

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

30/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

06/04/2026

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

23/03/2026

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்: வீட்டு வாடகை சலுகையில் (HRA) முக்கிய மாற்றங்கள்!

22/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் ‘வெற்றி’ திட்டங்களுக்கு முக்கியத்துவம்
  • தவெக பட்ஜெட் பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்ட வெற்று நிதிநிலை அறிக்கை
  • அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்
  • சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
  • தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved