Friday, July 24, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

admin by admin
31/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு தரப்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் ஐயா. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக்கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.

அவர் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்

Tags: எடப்பாடி பழனிசாமிராமநாதபுரம் மாவட்டம்
Previous Post

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

Next Post

செங்குன்றம் அருகே சிறுவன் கொடூர கொலை: 4 பேர் கைது

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved