ஆரணிய அடுத்த குன்னத்தூரில் நேற்று கன்று விடும் திருவிழா நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். ர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 500 இளங்காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றன.
விழாவில் ஆரணி திமுக ஒன்றிய செயலாளர் துரைமாமது கலந்துகொண்டு காளை வீரர்களை உற்சாகப்படுத்தினார். ஆரணி ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணிரவி, நகரமன்றத்தலைவர் ஏ.சி. மணி, ஒன்றியசெயலாளர்கள் மோகன், சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.30ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டது. 2ம் பரிசாக ரூ.25ஆயிரம், 3வது பரிசாக ரூ.20 ஆயிரம், 4ம் பரிசாக ரூ.15ஆயிரம், 5வது பரிசாக ரூ.10ஆயிரம், 6 வது பரிசாக ரூ.9ஆயிரம், 7வது பரிசாக ரூ.8 ஆயிரம் மற்றும் 80 காளை உரிமையாளர்ளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை குன்னத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.



