Tuesday, June 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி

பெண்கள் மீண்டும் சாதனை; 63 பள்ளிகள் 100% வெற்றி

admin by admin
08/05/2026
in செய்திகள், புதுச்சேரி
0
புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ்-2 தேர்வில் 98.57% தேர்ச்சி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி செயல்படும் தனியார் பள்ளிகளில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 98.57 சதவீத தேர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றி வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தில் இயங்கி வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மொத்தம் 7,497 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7,390 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 3,811 மாணவர்களும், 3,579 மாணவிகளும் அடங்குவர். ஆண்கள் தேர்ச்சி விகிதம் 97.97 சதவீதமாகவும், பெண்கள் தேர்ச்சி விகிதம் 99.22 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

பிராந்திய வாரியாக பார்க்கையில், புதுச்சேரியில் 98.65 சதவீதமும், காரைக்காலில் 97.67 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மொத்தம் 100 தனியார் பள்ளிகளில் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் புதுச்சேரியில் 54 பள்ளிகளும், காரைக்காலில் 9 பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தாண்டு தேர்வில் பல்வேறு பாடங்களில் மொத்தம் 500 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி இயற்பியலில் 3 பேர், வேதியியலில் 6 பேர், உயிரியலில் 9 பேர், கணிப்பொறி அறிவியலில் 190 பேர், கணிதத்தில் 5 பேர், பொருளியலில் 12 பேர், வணிகவியலில் 27 பேர், கணக்குப் பதிவியலில் 36 பேர், கணிப்பொறி பயன்பாட்டில் 69 பேர் மற்றும் பிரெஞ்சு மொழியில் 123 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: காரைக்கால்பிளஸ்-2 தேர்ச்சிபுதுச்சேரி
Previous Post

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

Next Post

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved