விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 82 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா மேல் பாப்பாம்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சக்தி வரவேற்பு உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சரும் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் அன்னம்மாள் ஆப்ரகாம், ஒன்றிய அவைத் தலைவர் மணிவண்ணன், மார்ட்டின் புஷ்பராஜ், தினேஷ், அந்தோனி, சரவணன், சுந்தர்ராஜ், கோபிநாத், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



