Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
23/04/2025
in இந்தியா
0
பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

பயங்கரவாதிகளுக்கும், தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து கட்சிகளும், வர்த்தக அமைப்புகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன. இப்போராட்டம் முழு வெற்றி பெற வேண்டும் எனக் கூறியிருந்தன.

இதனையடுத்து மாநிலம் முழுதும் நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால், ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வணிகர்கள் சிலர் கூறுகையில்,

AlsoRead

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

‘ நேற்று (நேற்று முன்தினம்) மனதை வலிக்கும் வகையில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மனிதநேயத்திற்கு எதிரான மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக வணிகர்கள் எல்லோரும் உள்ளோம் என்றனர்.

சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், இது மிகப்பெரிய தாக்குதல். சோகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற தாக்குதல் நடந்து இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.

ஸ்ரீநகரில் வசிக்கும் ஆஷிக் கூறியதாவது:

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது என்ற செய்தி நல்ல கவலை தரும் செய்தி. இது மனிதநேயத்திற்கு எதிரானது. இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என தெரியவில்லை. சுற்றுலா உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது நடந்தது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உலகம் முழுதும் பெயர் கெட்டு போய் உள்ளது. இது போன்று மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடாது. இது முற்றிலும் கண்டனத்திற்கு உரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: Jammu and Kashmirterror attack
Previous Post

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

Next Post

துணைவேந்தர் மாநாடு மாநில அரசுக்கு எதிரானது அல்ல: ஆளுநர் மாளிகை விளக்கம்

Related Posts

Commercial cylinder supply

வணிக சிலிண்டர் விநியோகம் 70% ஆக உயர்வு – மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

27/03/2026
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

“மதம் மாறியவர்கள் பட்டியல் சாதி (SC) அந்தஸ்தை கோர முடியாது” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

24/03/2026

ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி தீவிரம்: பட்ஜெட் குறைப்பு, அமைச்சர்கள் சம்பள ஒத்திவைப்பு!

23/03/2026

வாக்குச் சாவடிகளில் குடிநீர், செல்போன் பாதுகாப்பு அறை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

23/03/2026

LPG,எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

22/03/2026

சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா – இந்தியா வர்த்தகம்: சென்னைக்கு வந்த 1.10 லட்சம் டன் கச்சா எண்ணெய்!

21/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved