Sunday, June 28, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதாக தகவல்;

ஆட்சியமைப்பாரா த.வெ.க. தலைவர் விஜய்?

admin by admin
09/05/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதாக தகவல்;
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் ஆர்.என். ரவி அர்லேகர் இதுவரை அழைக்கவில்லை.

AlsoRead

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

த.வெ.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் முன்வந்திருந்தாலும், பெரும்பான்மைக்கு இன்னும் தேவையான எண்ணிக்கை இல்லாததால் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான ஆதரவை திரட்டும் பணியில் த.வெ.க. தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுவதால், தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க.வின் நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. த.வெ.க. தரப்பில் இருந்து திருமாவளவனிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

வி.சி.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் சென்றுள்ளார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தமிழக பொறுப்பு கவர்னரான அர்லேகர் இன்று மாலை கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில கவர்னராகவும் பொறுப்பு வகித்து வரும் அவர், அங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய ஆட்சி அமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 16-வது சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், வருகிற 10-ந்தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு அமைக்கப்படாத பட்சத்தில், மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழலும் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இன்று மாலைக்குள் விஜய் கவர்னரை சந்தித்து பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பாரா என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரங்கேறும் அரசியல் திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தை பரபரப்பின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன.

Tags: கவர்னர் அர்லேகர்த.வெ.க தலைவர் விஜய்
Previous Post

அமெரிக்கா – ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை

Next Post

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

Related Posts

Kudiyatham

குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!

27/06/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குடியாத்தத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் பேனர்கள் அதிரடி அகற்றம்!
  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved