Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

admin by admin
16/10/2024
in மாவட்டங்கள்
0
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம்

தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிறப்பு பதிவு

குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான

அத்தாட்சி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற

பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின்

பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

பெயரில்லா பிறப்பு சான்றிதழினால் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை.

பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற,

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற மற்றும் வயது குறித்த இன்றியமையாத ஆவணமாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு

செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து

வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித

கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

தவறினால் 12 மாதங்களுக்குப் பின் 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி

குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை

பதிவு செய்ய இயலாது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தை பிறந்து 15 வருடங்கள்

நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக தமிழ்நாடு பிறப்பு-இறப்பு

விதிகள் 2000-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மேலும் 5 ஆண்டுகள்

01.01.2020 முதல் 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் நீட்டிப்பு

நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன.

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைபடி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு

செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும்

குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்றிதழ் பெற வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு சம்பந்தப்பட்ட பிறப்பு-இறப்பு

பதிவாளரையும், நகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புகளுக்கு நகராட்சி அலுவலகத்தில்

விண்ணப்பித்தும் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இனிவரும் காலங்களில் கால அவகாச நீட்டிப்பு வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு

இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை கள்ளக்குறிச்சிமாவட்ட

பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட வேண்டுமென

மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Previous Post

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

Next Post

விழுப்புரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் ஆய்வு

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved