Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?

Balaji by Balaji
23/03/2026
in மாவட்டங்கள்
0
School student tragedy (Representavive image: Freepik)

School student tragedy (Representavive image: Freepik)

0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அரியலூர் மாவட்டம் குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கோல் ராஜ் – திலகா தம்பதியினர், வேலை நிமித்தமாக தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். செங்கோல் ராஜ் டிரைவராகவும், திலகா பஞ்சாலையில் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் 14 வயது மகன் ரென்ஸோ, தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், செங்கோல் ராஜ் வேலை காரணமாக கோவாவுக்கு சென்றிருந்தார். திலகா கடந்த 22ஆம் தேதி காலை முதல் ஷிப்டில் பணிக்கு சென்றார். பின்னர் பஞ்சாலை நிர்வாகம் கேட்டதன் பேரில் இரண்டாவது ஷிப்டையும் தொடர்ந்து வேலை செய்தார்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய திலகா, கதவைத் தட்டியபோதும் திறக்காததால் சந்தேகமடைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவரது மகன் ரென்ஸோ சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

பின்னர் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவன் ரென்ஸோ கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மனநல ஆலோசனைக்கான குறிப்பு:

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையில் எத்தகைய பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு, மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால் கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

  • தமிழக அரசின் உதவி எண்: 104

  • சினேகா அமைப்பு: 044-24640050

Tags: Dindigul crime newsDindigul news ThadikombuEducation stressSchool student tragedyTeenage tragedytragedy
Previous Post

திண்டுக்கல்: பைக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,500 பறிமுதல்

Next Post

தென்மாவட்ட அரசியல் சதுரங்கம்: உதயகுமார் – ஓ.பி.எஸ்-க்கு ‘செக்’ வைக்கத் தயாராகும் திமுக – அதிமுக!

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 4.46 கோடிக்கு மேல் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved